என்னை பாஜகவில் சேர கட்டாயப்படுத்துகிறார்கள் - அர்விந்த் கேஜ்ரிவாலின் அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

தன்னை பாஜகவில் இணைய கட்டாயப்படுத்துவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பாஜகவுக்கு எதிராக மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய அர்விந்த் கேஜ்ரிவால், உடனடியாக டெல்லியில் ஆட்சியைப் பிடித்து அசத்தினார். தொடர்ந்து பஞ்சாபிலும் தனது கட்சி ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்தார். தற்போது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இவர், பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கேஜ்ரிவால் கூறியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை அளிக்குமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்தனர்

இந்தச் சூழலில், தன்னை பாஜகவில் இணையக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கேஜ்ரிவால். இது தொடர்பாகப் பேசிய அவர், "எங்களுக்கு எதிராக அவர்கள் எந்த சதியும் செய்ய முடியும். நானும் உறுதியாக இருக்கிறேன். நான் வளைந்து கொடுக்கப் போவதில்லை. என்னை பாஜகவில் சேரச் சொல்கிறார்கள். அதன் பின்னர் அப்படியே என்னை காலி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். ஆனால் நான் ஒருபோதும் பாஜகவுக்குச் செல்ல மாட்டேன் என்று சொன்னேன். என்ன ஆனாலும் சரி நான் பாஜகவில் மட்டும் இணையவே மாட்டேன்" என்று கூறினார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

தொடர்ந்து பேசிய அவர், " இன்று அனைத்து மத்திய விசாரணை ஏஜென்சிகளும் எங்களைத் தான் குறிவைக்கிறார்கள். மனிஷ் சிசோடியா செய்த தவறு அவர் நல்ல பள்ளிகளை உருவாக்கியது தான். சத்யேந்தர் ஜெயின் செய்த தவறு, அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கியதுதான். எங்களை அழிக்க அனைத்து வகையான சதிகளையும் உருவாக்கினர். ஆனால் எங்களைத் தடுக்க முடியவில்லை. பொதுமக்கள் தங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்குத் தந்து வருகிறார்கள். அதுவே எங்களுக்கு போதும். அதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in