`என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்’- நடிகை காயத்ரி ரகுராமை சாடும் அண்ணாமலை

அண்ணாமலை
அண்ணாமலைவிமர்சனங்களை கடந்து செல்லுங்கள் - அண்ணாமலை அட்வைஸ்

``அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``பலரின் தியாகத்தால் அயராத உழைப்பாலும் வளர்ந்த கட்சி பாஜக. விமர்சனங்களுக்கு அஞ்சுவதா..? விமர்சனங்கள் நமது கட்சியின் உரம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள், அவதூறுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். என் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றுவதை அறிகிறேன். அதேநேரத்தில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

என் மேல் தினந்தோறும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் பயந்தால் என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கி கிடக்க வேண்டியது தான். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன்.

உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர்கள். பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in