‘பாஜக தேசத்தை உடைக்கிறது, நாங்கள் அதை ஒருங்கிணைக்கிறோம்' - மல்லிகார்ஜுன கார்கே

‘பாஜக தேசத்தை உடைக்கிறது, நாங்கள் அதை ஒருங்கிணைக்கிறோம்' - மல்லிகார்ஜுன கார்கே

தற்போது நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜக நாட்டை உடைக்கும் அதே வேளையில் காங்கிரஸ் கட்சி நாட்டை ஒருங்கிணைக்கிறது” என தெரிவித்தார்.

டெல்லியில் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளில் நடைபெற்ற சொற்பொழிவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் வளர்ச்சியை புறக்கணித்து கடந்த காலத்தை தோண்டி எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், “தேசத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களிடம் கெட்டுக்கொள்ளுங்கள். அப்புறம் நாங்கள் என்ன செய்யவில்லை என்பதை எங்களிடம் கூறுங்கள்.

பொருளாதாரம், மருத்துவர்களின் எண்ணிக்கை மற்றும் விவசாயிகளின் நிலை குறித்த கேள்விகளுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும்

இந்த நாட்டில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் 75,000 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்குகிறீர்கள். மீதமுள்ள வேலைகள் எங்கே?. அரசாங்கத் துறைகளில் உள்ள காலியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நேரு குறித்து பேசிய அவர், “இந்திய ஜனநாயகம் நீண்ட காலம் நீடிக்காது என்று சர்ச்சில் குறிப்பிட்டார். இருப்பினும், நேருவின் தலைமையின் கீழ், அணிசேரா இயக்கத்தின் தலைவராக இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது” என கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in