`மாணவர்களின் இந்த செயலுக்கு இந்த இரண்டுதான் காரணம்'- ராமதாஸ்

`மாணவர்களின் இந்த செயலுக்கு இந்த இரண்டுதான் காரணம்'- ராமதாஸ்

ஆசிரியரை மாணவர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் நிகழ்வை கண்டித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ரெக்கார்ட் நோட் எழுதாததற்காக கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் காணொலி வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தாய், தந்தையருக்குப் பிறகு மாணவர்கள் வாழ்வில் ஆசிரியர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தான் மாணவர்களை கரை சேர்க்கும் ஓடங்கள். கடவுளாக மதிக்க வேண்டியவர்களையே திட்டி, தாக்க முயலும் அளவுக்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

திரைப்படங்களில் ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதும், சமூகச் சூழலும் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in