
"2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்திய அரசியல் வானில் கம்பீர பெண்மணியாக நின்றவர் சோனியா காந்தி. இளம் அரசியல் ஆளுமையாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா காந்தி. நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும்போது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாக பெருமைப்படுகிறேன். தங்கை கனிமொழி தமிழ்நாட்டில் இந்திய சங்கமத்தை நடத்தி காட்டி உள்ளார். சென்னை சங்கமம் நடத்திக் காட்டிய கனிமொழி இப்போது இந்திய சங்கமத்தை நடத்திக் காட்டியுள்ளார். இந்தியா கூட்டணியின் மகளிர் தலைமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பாஜகவை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார். உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம். 33 சதவீத இட ஒதுக்கீடு என்று கூறி பெண்களை ஏமாற்ற பாஜக சதி செய்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம். பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று பாஜக ஆட்சி நினைக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!
குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!
‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!
பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு!
பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!