பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! கனிமொழி ஆவேசம்

கனிமொழி
கனிமொழி
Updated on
1 min read

"மத்திய பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நாடெங்கும் நிலவுகிறது" என்று திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக பேசினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பேசிய கனிமொழி, "அறிவொளி பெற்ற தீபங்களாக இந்த மாநாட்டில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். மகளிர் உரிமை மாநாட்டுக்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு. இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கு காவல்துறையில் பணி செய்ய வாய்ப்பளித்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாடு மகளிர் முன்னேற்றத்திற்காக உரிமை தொகை வழங்கப்படுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. படிக்க ஆர்வம் உள்ள பெண்களுக்கு திமுக அரசு நிதிக் கொடுத்து உதவி வருகிறது. இந்தியாவில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையை பாஜக ஆட்சி ஏற்படுத்தி உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரே அவமதிக்கப்படுகிறார். மத்திய பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நாடெங்கும் நிலவுகிறது.

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாங்கள் யாகசம் கேட்கவில்லை. உரிமைக்காக போராடுகிறோம். குடியரசுத் தலைவர் ஒடுக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால் கோயிலுக்கு சொல்ல முடியாத சூழல் உள்ளது. புதுச்சேரி பாஜக ஆட்சியில் இருந்த ஒரு தலித் அமைச்சராக நீடிக்க முடியாத நிலை உள்ளது. பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் இழைக்கப்பட்டு உள்ளது. பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் மசோதா நடைமுறைக்கு வராது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in