ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதில் ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு?

ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பிற்குப் பதில் ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு?

குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புக்குப் பதிலாக , இந்த ஆண்டு ரொக்கம் வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தை முதல்நாள் தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் சுமார் 1297 கோடி மதிப்பீட்டில் 2 கோடியே 15 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்குப்  பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களும், துணிப்பை மற்றும் கரும்பு என 21 பொருட்கள் அந்தத் தொகுப்பில் அடங்கி இருந்தது. அதில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றது என சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானது. இந்தநிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சுமார் 500 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் இந்த ஆண்டு அதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக, ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in