‘ஒரு மசோதா வந்ததுமே ஆளுநர் கையெழுத்து போட வேண்டிய அவசியமில்லை’ - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்துப்போடாமல் இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதில் கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஜி 20 மாநாடுக்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரிய நிகழ்வு. இதற்காக அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுடனும் டெல்லியில் நாளை மோடி ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, வரும் 9-ம் தேதி மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கம் உள்ளது. நாம் அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசியே காரணம் ஆனது. அதற்கு காரணம் மோடி. அதேபோல் அதை ஏற்றுக்கொண்ட மக்களும், மாநில அரசுகளும் காரணம்.

அரசியல் ரீதியாக ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என ஆளுநர் சில விளக்கங்கள் சொல்லி உள்ளார். ஒரு மசோதா வந்தாலே ஆளுநர் எந்த விளக்கமும் கோராமல் உடனே கையெழுத்துப்போட வேண்டும் என்னும் அவசியம் இல்லை. அமைச்சரை அழைத்து விளக்கம் கேட்டிருக்கிறார் ஆளுநர் என்கிறார்கள். விளக்கம் தெரிந்தவுடன் அவர் முடிவெடுப்பார். விளக்கமும், சந்தேகத் தெளிவிற்கும் ஆளுநர் நேரம் எடுத்துக்கொள்ளலாம்”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in