மோடி அலையெல்லாம் இல்லை... விஷம்தான் பரவியிருக்கிறது; கொந்தளிக்கும் காங்கிரஸ்!

பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்; மோடி மற்றும் ராகுல்
பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்; மோடி மற்றும் ராகுல்

மக்களவைத் தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது. முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும்.

தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி
தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்? என நினைவுகூர்வோம். நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். அப்படியென்றால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்? சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்” என்று பேசியிருந்தார்

பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாகவும், தவறானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாகவும் இருப்பதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை. மோடியால் பரப்பப்பட்ட விஷம்தான் உள்ளது. நாட்டு மக்கள் சந்தித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், பொருளாதார பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப மோடி முயற்சிக்கிறார். ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது முதல் ஜனநாயகத்திற்கு ஆபத்தான அறிகுறிகள் தெரிகின்றன” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in