
தமிழகத்தில் தடைப்பட்டுள்ள ஆவின்பால் விநியோகத்தை முதலமைச்சர் சீர்செய்து, ஏழை மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின்பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘’ஏழை. எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால், அதனைச் செய்ய தமிழக அரசு தவறிவிட்டதாக நினைக்கிறேன். தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருளான ஆவின்பால் தட்டுபாடு நிலவுகிறது. இது ஏழை, எளிய மக்களை மிகவும் பாதித்துள்ளது. அதனைச் சரி செய்ய தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.