`அப்போது நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர்'- முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்விட்டர் பதிவை நினைவுபடுத்திய அண்ணாமலை!

`அப்போது நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர்'- முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்விட்டர் பதிவை நினைவுபடுத்திய அண்ணாமலை!

அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அவலம் குறித்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் போட்ட ட்விட்டர் பதியை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது. அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இது குறித்து போட்ட ட்விட்டர் பதில், "இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?. உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஒருபடி மேலே போய் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அவலம் குறித்து போட்ட ட்விட்டர் பதியை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாிலன் அவர்களே, தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நீங்கள் கூறியதை ஒரு மென்மையான நினைவூட்டல். இப்போது வளர்ந்து வரும், நம்பிக்கைக்குரிய கால்பந்தாட்ட வீராங்கனையான பிரியா, அரசு மருத்துவமனையில், அதுவும் உங்கள் தொகுதியில் அறுவை சிகிச்சையின் மூலம் தனது உயிரை இழந்தார். உங்கள் மனசாட்சி அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன்!" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in