வெள்ளி வேல், செங்கோல் திருட்டு: அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற சி.வி.சண்முகம் அதிர்ச்சி!

வெள்ளி வேல், செங்கோல் திருட்டு: அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற சி.வி.சண்முகம் அதிர்ச்சி!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த வெள்ளி வேல் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நுழைய முற்பட்டனர். அப்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து சி.வி. சண்முகம் எம்.பி முன்னிலையில், மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை அகற்றினார். இதையடுத்து அதிமுக பிரமுகர்கள் தலைமை அலுவலகத்தினுள் நுழைந்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த வெள்ளி வேல் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in