`அரசியல் என்ற வார்த்தை புனிதமானது'- முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகை சங்கீதா பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நடிகை சங்கீதா
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நடிகை சங்கீதா’’அரசியல் என்ற வார்த்தை புனிதமானது’’ - நடிகை சங்கீதா..!

’’அரசியல் என்பது புனிதமானது. மக்களுக்கு தேவையானதை காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். அவர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அரசியல் என்ற வார்த்தையை சிலர் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்’’ என நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்டம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகை சங்கீதா, ‘’ அரசியல் என்பது புனிதமான வார்த்தை. மக்களுக்கு தேவையானதை காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். அவர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அரசியல் என்ற வார்த்தையை சிலர் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.

தூரமாக நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறைகளை மட்டுமே கூறி அரசியல்வாதிகளை நிம்மதியாக வேலை செய்ய விடுவதில்லை. இன்னாருடைய மகன் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இடத்திற்கு வரவில்லை. அவரது உழைப்பால் இன்றைக்கு இந்த உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பது தான் உண்மை.

இந்த மாதம் முழுவதும் பெண்களுக்கான மாதம். பெண் பிள்ளைகளைக் கொண்டாட வேண்டும். பெற்றோர்களுக்கு எனது கோரிக்கை, பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். அதே நேரத்தில் ஆண் பிள்ளைகளிடத்தில் பெண்பிள்ளைகளை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in