2 ஆயிரம் ஆடு, 5 ஆயிரம் கோழியுடன் பிரியாணி விருந்து; மொய் வசூலிக்க 50 ஹைடெக் கவுன்டர்: அமர்க்களப்படுத்திய அமைச்சர் மூர்த்தி

 2 ஆயிரம் ஆடு,  5 ஆயிரம் கோழியுடன்  பிரியாணி விருந்து;   மொய் வசூலிக்க 50 ஹைடெக் கவுன்டர்: அமர்க்களப்படுத்திய அமைச்சர் மூர்த்தி

தமிழக வணிக மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மூத்த மகனான தியானேஷின் திருமணம் மிக பிரம்மாண்டமான முறையில் மதுரையில் இன்று நடைபெற்றது.

மதுரையைச் சேர்ந்த அமைச்சர் பி.மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக மதுரை பாண்டி கோயில் அருகே 32 ஏக்கரில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. 1 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தலும, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. மொய் வசூலிப்பதற்காக தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருமணவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கறிவிருந்து நடந்தது. இதற்காக 2 ஆயிரம் ஆடுகள், 5, ஆயிரம் கோழிகளுடன் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. சைவ விருந்துக்கு தனிப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி நடந்தது. இந்த திருமண விழாவிற்காக பிரம்மாண்டமான முகப்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சாலை தொடக்கத்தில் இருந்து திருமணம் நடைபெற்ற இடம் வரை முழுவதும் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகளும், வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

அமைச்சரின் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் திருமணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று மாலை நடந்த வரவேற்பில் ஐம்பதாயிரம் பேருக்கு விருந்தும் நடைபெற்றது. அமைச்சரின் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் திருமணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட அமைச்சர் மூர்த்தி மகனின் திருமணத்தைக் கண்டு திமுக தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் வியந்து பேசி வருகிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட அமைச்சர் மூர்த்தி மகனின் திருமணத்தைக் கண்டு திமுக தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் வியந்து பேசி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in