`எந்த உண்மையும் கிடையாது, தவறான செய்தி'- சசிகலாவின் உறவினர் டி.டி.வி.பாஸ்கரன் வெளியிட்ட வீடியோ

`எந்த உண்மையும் கிடையாது, தவறான செய்தி'- சசிகலாவின் உறவினர் டி.டி.வி.பாஸ்கரன் வெளியிட்ட வீடியோ

"தயவுசெய்து இனிமேல் இது போன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று மீடியாத்துறை நண்பர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோளாக வைக்கிறேன்" என்று டி.டி.வி.பாஸ்கரன் கூறியுள்ளார்.

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.பாஸ்கரனிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியதாக செய்தி வெளியானது. இதனை டி.டி.வி.பாஸ்கரன் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எல்லோருக்கும் வணக்கம். நீலாங்கரையிலிருந்து நான் பாஸ்கரன் பேசுகிறேன். முக்கியமாக பத்திரிகைத்துறை, மீடியாத்துறையில் உள்ளவர்களுக்கு எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். தற்போது எனது புதிய படத்தில் மும்முரமாக இருந்து வருகிறேன். இப்படி இருக்கும்போது காலையில் ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். செம்மரம் கடத்தல் வழக்கில் என்னிடம் விசாரணை செய்து கொண்டு இருப்பதாக தகவல் வந்தது. நிறைய சேனல்களில் என்ன என்று செக் பண்ணாமல் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் என்று என்னுடைய படத்தையும் போட்டு இருக்கிறார்கள்.

நான் மீடியாத்துறை நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், அந்த மாதிரியான விஷயத்தில் எனக்கு சம்பந்தம் கிடையாது. அது உண்மையும் கிடையாது. உலகத்தில் எத்தனையோ பாஸ்கரன் இருக்கலாம். உறவினர்களிடையே நிறைய பாஸ்கரன் இருக்கிறார்கள். அது எந்த பாஸ்கரன் என்று நீங்கள் பார்த்து செக் பண்ணி போட வேண்டும். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், அந்த பாஸ்கரன் சசிகலாவுக்கு நெருங்கிய உறவினர் கிடையாது. தூரத்து உறவினர்தான். இந்த செய்தி தொடர்பாக நிறைய போன்கள் எனக்கு வந்தது. இதை நீங்கள் மறுப்பு போடவில்லை என்றால் எந்தெந்த சேனல்களில், எந்தெந்த மீடியாக்களில் செய்தி போட்டார்களோ சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். தயவுசெய்து இனிமேல் இது போன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று மீடியாத்துறை நண்பர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோளாக வைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in