ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் ரகுபதி

``ஜல்லிக்கட்டு வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒத்தக் கருத்துடன் தீர்ப்பு வழங்கி இருப்பது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கிய நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘’ ஐந்து நீதிபதிகளும் ஒத்தக் கருத்துடன் தீர்ப்பு வழங்கி இருப்பது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தங்களுடைய வாதங்களை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

தமிழக அரசின் சிறப்பான வாதங்களை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வெற்றி என்பது முதல்வரின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி. தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தோடு ஒன்றிபோன ஒன்று இதனைப் பிரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை எல்லாம் வழங்கியுள்ளார்களோ அதன் அடிப்படையில் தான் போட்டி நடத்தப்படுகிறது. அவர்கள் நிபந்தனைகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுதான் நடத்தி வருகிறோம். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தமிழக மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in