‘அண்ணாமலையை கைது செய்’- ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

ட்விட்டரில் டிரெண்டாகி வரும் #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக்
ட்விட்டரில் டிரெண்டாகி வரும் #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக்

‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்’ என்று ட்விட்டரில் #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தஞ்சாவூர் அருகே தனியார் பள்ளியில், 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவியின் மரண வாக்குமூலம், சிறுமியின் பெயர் மற்றும் அவரது முகவரியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். மதமாற்றம் தூண்டுதல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறிவந்தார்.

இதனிடையே, பொய்யான தகவல்களைப் பரப்பி, அதன்மூலம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்று அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தேசிய தலைவர் சாம் ஏசுதாஸ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 25-ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “இறந்தவர் சடலத்தை வைத்துக்கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் தமிழக பாஜகவுக்கு இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதைப் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in