ஸ்டாலின் பதவி விலகும் நேரம் வந்து விட்டது: அண்ணாமலை ஆரூடம்

ஸ்டாலின் பதவி விலகும் நேரம் வந்து விட்டது: அண்ணாமலை ஆரூடம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒருவரை கண்மூடித்தனமாக வெறுக்கிறார். அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை வரும் போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் அறிவித்திருந்தன. அதன்படி தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ," இன்று மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டது. அவரது கான்வாய் மீது திமுக ஆதரவாளர்கள் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒருவரை கண்மூடித்தனமாக வெறுக்கிறார். அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in