ஒரே விமானம், பேருந்தில் பயணம்; ஈபிஎஸ்ஸை பின் தொடர்ந்த வாலிபர்: 'துரோகி' என முழக்கமிட்டதால் பரபரப்பு!

பேருந்தில் எடப்பாடி பழனிசாமி  பயணம்
பேருந்தில் எடப்பாடி பழனிசாமி பயணம் ஒரே விமானம், பேருந்தில் பயணம்; ஈபிஎஸ்ஸை பின் தொடர்ந்த வாலிபர்: 'துரோகி' என முழக்கமிட்டதால் பரபரப்பு!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை வாலிபர் ஒருவர், திடீரென `துரோகி' என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும், டி.டி.வி, சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. கட்சியை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி இறங்கி வருகிறார். அவருக்கு ஆதரவாக 95% பேர் ஆதரவாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் வாலிபர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த வாலிபர் தனது முகநூல் பக்கத்தில், துரோகியுடன் பயணம் செய்வதாக பதிவு போட்டுள்ளார். இது விவாதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் மதுரை வந்து அடைந்த அந்த வாலிபர் எடப்பாடி எடப்பாடி பழனிசாமி உடன் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அப்போது, துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகத்தை செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீடு தென்னாட்டவர்களுக்கு கொடுத்தவர் என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தபோது எடப்பாடிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் அந்த வாலிபரின் வீடியோவை கையால் தட்டிவிட்டார்.

அந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்தவர் என்றும் சிவகங்கை மாவட்டம் சிங்கப்புலரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரின் மகன் ராஜேஷ்வரன் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று வாலிபர் ஒருவர் முழக்கமிட்டது மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in