அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி... திட்டமிட்டபடி நாளை மறுநாள் ஆசிரியர்கள் போராட்டம்!

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆசிரியர்களின் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கமான டிட்டோஜாக் சார்பில் அக்டோபர் 13-ம் தேதி அன்று சென்னை பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் (டிட்டோஜாக்) இடம்பெற்றுள்ள சங்கங்கள் சார்பாக ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் தலா இரண்டு பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். 

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து நாளை மறுநாள்(அக்.13)  திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in