அய்யாகண்ணுவிற்கு வாராணசியில் என்ன வேலை? உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

அய்யாக்கண்ணு - மோடி
அய்யாக்கண்ணு - மோடி

பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை மே 20 வரையில் நீட்டிக்ககோரி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் மோடி, அதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக, வாராணசியில் மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் முடிவு எடுத்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாராணசி செல்வதற்காக, அனைவரும் கடந்த 10ம் தேதி ரயிலில் முன்பதிவு செய்து தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறி, அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். இதனால், வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் போனது.

வேட்புமனு தாக்கல் செய்த மோடி
வேட்புமனு தாக்கல் செய்த மோடி

வாராணசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசத்தை மே 20ம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும். வாராணசி செல்ல உரிய வசதியை செய்து தர ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, "வாராணசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள், தமிழகத்தில் ஏன் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாராணசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?. சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். விளம்பரத்துக்காக இதுபோன்று மனு தாக்கல் செய்யாதீர்கள்" என்று தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர், "விளம்பர நோக்கத்திற்கு வழக்கு தொடரவில்லை. விவசாயிகளுக்காகவே போராடி வருகிறோம். இணையதளம் வாயிலாக வேட்பு மனு தாக்கல் செய்ய வசதி செய்யப்படவில்லை" என்று வாதிட்டார். இறுதியில், அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...


தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in