ஓமந்தூரார் தோட்டத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்படுகிறது கருணாநிதியின் சிலை!

ஓமந்தூரார் தோட்டத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்படுகிறது கருணாநிதியின் சிலை!

முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் உலோகத்தினாலான முழு உருவச்சிலை வைக்கப்படவிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை வைக்கபட்டுள்ள முழு உருவ உலோகச் சிலைகளிலேயே மிக உயரமான சிலையாக இது அமையவுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதனிடையே, இந்த சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கும்மிடிபூண்டியில் தயாராகிவரும் கருணாநிதியின் சிலையை பார்வையிட விரைவில் கும்மிடிப்பூண்டி செல்லவும் முதல்வர் திட்டமிட்டுள்ளாராம். “நீண்ட துாரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கருணாநிதி. அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு” என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியது போல, அனைவரும் அண்ணாந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்ட உயரத்தில் அமையுள்ள இந்த சிலை, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் தி.மு.க.வினர்

Related Stories

No stories found.