`முதல்வர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம் உள் நோக்கம் கொண்டது’- வானதி சீனிவாசன்!

பேரவையில் வானதி சீனிவாசன்
பேரவையில் வானதி சீனிவாசன்’முதல்வர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம் உள் நோக்கம் கொண்டது’ - பேரவையில் கொந்தளித்த வானதி சீனிவாசன்!

கிறிஸ்தவர்களாக மதம்மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்டச் சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உரியத் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இதற்கு அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்த நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். முன்னதாக இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சுகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகப் பேரவைத்தலைவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘’ இந்த விவகாரத்தை ஆராய மத்திய அரசு குழு அமைத்து அந்தக் குழு இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அந்த விசாரணை ஜுலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வரம்பிற்குள்ளாக இருக்கும் ஒரு விசயத்தைப் பற்றி எதற்காக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பட்டியலின மக்களுக்குத் தொடர்ச்சியாகத் தீண்டாமைக் கொடுமைகள் நடைபெற்று வருகிறது என இந்தத் தீர்மானம் சொல்ல வருகிறதா என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். சமூக நீதி, திராவிட மாடல் அரசு எனப் பேசும் திமுக ஏன் வேங்கைவயல் பிரச்சினை, பஞ்சமி நிலங்கள் மீட்பு, வாரம் ஒரு ஆணவக் கொலைகள் பற்றி பேசாதது ஏன்?. தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in