`நீங்கள் அவற்றை கண்டு பயப்படுகிறீர்கள்’- ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை வெளியில் அனுப்பிய சபாநாயகர்!

`நீங்கள் அவற்றை கண்டு பயப்படுகிறீர்கள்’- ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை வெளியில் அனுப்பிய சபாநாயகர்!

சட்டப் பேரவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்த பிரச்சினையை எழுப்பினார். இதனால் சட்டமன்றத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்ட போது, “கலகம் செய்ய வேண்டும் என நினைத்தே அவைக்கு வந்திருக்கிறீர்கள்'' என பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் இருக்கைக்குச் செல்லாமல் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அமளியில் ஈடுபடுவோரை வெளியேற்றச் சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இந்தி திணிப்பு எதிர்ப்பு மசோதாவைப் புறக்கணிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபடுவதாகச் சபாநாயகர் குற்றம்சாட்டினார்.

ஆனாலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையிலிருந்து எழுந்து, கலகம் செய்யாமல் சபை நாகரிகத்தோடு நடந்து கொள்ளுங்கள் எனப் பலமுறை அப்பாவு எச்சரித்துக் கொண்டே இருந்தார். மேலும் ”இந்தி திணிப்பு எதிர்ப்பு மசோதாவிற்கு நீங்கள் பயந்துவிட்டீர்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையைக் கண்டு பயப்படுகிறீர்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையைக் கண்டு பயப்படுகிறீர்கள். நீங்கள் வெளியேறிவிடுங்கள்” என்றார். மேலும் அவர்களை வெளியேற்றக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in