கும்பகோணம் வணிகர் சங்க பிரமுகர்களுடன் அன்பழகன் எம்எல்ஏ.
கும்பகோணம் வணிகர் சங்க பிரமுகர்களுடன் அன்பழகன் எம்எல்ஏ.

சொத்துவரியை 50 சதவீதமாக குறைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்எல்ஏ திடீர் கடிதம்

கும்பகோணத்தில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று கும்பகோணம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்துள்ள திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் 100 சதவீத அளவிற்கு சொத்து வரியை உயர்த்தி தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அதிகமாக இருப்பதாகவும் இதனை பாதியாக குறைக்க வேண்டும் என்றும் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை குடந்தை அனைத்து தொழில் வணிகர் கூட்டமைப்பினர் கடந்த ஜனவரி 30-ம் தேதி அன்று சந்தித்து கோரிக்கை அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைப்பதாக அவர்களிடம் உறுதியளித்த அன்பழகன், தமிழக முதல்வருக்கு இது குறித்து கோரிக்கை கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார். அதில், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும்  விடுதிகளில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி கட்டணம்  அதிகமாக இருப்பதாக வணிகர்கள் மற்றும் உரிமையாளர்கள்  வேண்டுகோள் வைத்துள்ளனர். எனவே, அவர்களின்  கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்  சொத்து வரியை குறைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து  முதல்வருக்கு இதுகுறித்து உடனடியாக  கோரிக்கை விடுத்திருப்பதற்கு  கும்பகோணம் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in