தபால் வாக்குகள் எண்ணிக்கை
தபால் வாக்குகள் எண்ணிக்கை

தென்காசி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கை முடிவு: உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல்

தென்காசி தொகுதி சட்டமன்றத்தில் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் என்னும் பணி நேற்று நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டரும்,  தேர்தல் அலுவலருமான லாவண்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் நீதிமன்ற உத்தரவின்படி  எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 704 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 1,642 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  

மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 2,971. அதில்  தள்ளுபடி செய்யப்பட்ட வாக்குகள் 316, நோட்டாவுக்கு கிடைத்தவை 12, இதற்கு முந்தைய வாக்கு எண்ணிக்கையில் 370 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றிருந்தார். இப்போது 373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முந்தைய வாக்கு எண்ணிக்கையில் 82 வாக்குகள் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது.  அதை தற்போது பிரித்துப் பார்த்தபோது அதில் பழனி நாடாருக்கு 36 வாக்குகளும் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 31 வாக்குகளும் கிடைத்துள்ளன.  கடந்த முறை 13 சி படிவத்தில் மேற்பகுதியில் கையெழுத்து இடாமல் இருந்ததை கணக்கில் எடுக்கவில்லை.  இப்போது அதை கணக்கில் எடுத்து உள்ளோம். 

இந்த முடிவுகள் உடனடியாக நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூலை 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு உள்ளது. இந்த எண்ணிக்கையின் போது  அதிமுகவினர் கூறிய அனைத்து குறைபாடுகளையும் களைந்து விட்டோம்' என்று கூறினார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in