திருப்பிக்கொண்டுவிட்ட திருப்பதி தேவஸ்தான உறவு!

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

தமிழகத்துக்கு மிகவும் அறிமுகமான பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்திற்கு மிகமிக நெருக்கமானவர். தமிழக பிரபலங்களை திருப்பதி கோயிலின் உள்ளே அழைத்துச்சென்று தரிசனம் செய்யவைத்து முதல் மரியாதை செய்வதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்.  ஆனால், அவருக்கு அங்கிருந்த  உறவும், நட்பும்  தற்போது  கசந்து போயுள்ளதாம். அதற்குக் காரணம், நிச்சயிக்கப்பட்ட ரெட்டியின் மகள் திருமணம் நின்று போனதுதான்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக இருப்பவர்  தர்மா ரெட்டி. அவரிடம் இருந்த நெருக்கமே திருப்பதியில் சேகர் ரெட்டிக்கும் செல்வாக்கு அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இந்த நிலையில், தர்மா ரெட்டியின் மகன் சந்திரமவுலிக்கு தனது மகளை திருமணம் செய்வதற்காக  நிச்சயதார்த்தம் செய்திருந்தார் சேகர் ரெட்டி.

இந்நிலையில், கடந்த மாதம்  18-ம் தேதி எதிர்பாராத விதமாக  சந்திரமவுலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி 21-ம் தேதி இறந்து போனார். இந்த மரணம் தொடர்பாக தர்ம ரெட்டிக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளனவாம்.  இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் ரெட்டிகளுக்கு இடையேயும் இடைவெளியை அதிகரிக்கச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் முன்பிருந்த செல்வாக்கும் இப்போது ரொம்பவே மங்கிவிட்டதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in