மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடாடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு வாக்குகள் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை மேற்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “ ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க ஒரு காரணம் பெரியார். அடுத்ததாக ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்த போது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடாடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம் . தமிழ்நாடு காக்கும் வியூகம்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசாவைத்தான் மத்திய அரசு நமக்கு திரும்ப கொடுக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் ஒரு ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு 7 ரூபாய் திரும்ப கிடைக்கிறது. ஆனால் அந்த ஊர்களிலிருந்துதான் இங்கே வேலைக்கு வருகிறார்கள். காரணம் அங்கே வேலை இல்லை, அதற்கு காரணம் என்ன என்று கேட்க வேண்டும். 29 பைசாவை வைத்துக்கொண்டு மதிய உணவு திட்டம், காலை உணவுத்திட்டம், மகளிருக்கு நிதி போன்ற வளர்ச்சித் திட்டங்களை நாம் வழங்குகிறோம் .ஆனால் 7 ரூபாய் வாங்கும் அந்த மாநிலங்களில் வளர்ச்சி இல்லாதது ஏன்?. அரசியலில் மதம் கலந்தால் உருப்படாமல் போகும் என்பதற்கு இதுவே உதாரணம். நாடு காக்கும் தன்மை தமிழருக்கு உள்ளது. எனவே நாம் நாட்டை காக்க வேண்டும்” என தெரிவித்தார்
இதையும் வாசிக்கலாமே...
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!
பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!
கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!
திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு