பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது முதல்வரின் கார்: இரவில் செஞ்சியில் பரபரப்பு

பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது முதல்வரின் கார்: இரவில் செஞ்சியில் பரபரப்பு

போக்குவரத்து நெரிசலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிக்கிக்கொண்டார். பல மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்ய செய்யப்பட்டு முதல்வரின் கார் அங்கிருந்து புறப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடந்த மகா தீபத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று திருவண்ணாமலை சென்றார். அங்கு தீப விழாவில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முதல்வர் ரங்கசாமி கார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில் முதல்வரின் கார் சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி முதல்வர் ரங்கசாமி தவித்தார். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி முதல்வரின் காருக்கு வழி விட்டனர். பின்னர் அங்கிருந்து முதல்வரின் காரில் புறப்பட்டு சென்றது.

போக்குவரத்து நெரிசலில் புதுச்சேரி முதல்வரின் கார் பல மணி நேரம் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in