பரபரப்பு வீடியோ... பாக்ஸிங் செய்ய இடம், மைதானம் ரெடி... சீமானை அழைக்கும் வீரலட்சுமி!

வீரலட்சுமி
வீரலட்சுமி

தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி கணவருடன் பாக்ஸிங் செய்ய ரெடி என சீமான் தெரிவித்திருந்த நிலையில் இடம், நேரம், தேதியை வீரலட்சுமி அறிவித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமியின் கணவர் பூவை.கணேசன் தொடர்பு கொண்டு பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில், '’அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே’’ என கூறியதும் அந்த இணைப்பை சீமான் துண்டித்து விடுவார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த சீமான், ‘’அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டுச் சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க'’ என்றார்.

இந்த நிலையில், பாக்ஸிங் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வீரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘’பெண் தலைவர் என்றும் பாராமல் நீங்கள் என்னை இழிவுடுத்தினால் நான் பொறுத்து போகலாம். ஆனால், என்னுடைய கணவர் எப்படி பொறுத்து போவார். அதனால் தான் உங்களைத் தொடர்பு கொண்டார். நீங்கள் போனில் பேசமால், ஊடகங்கள் முன்னால் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை பஞ்சாயத்துள்ள மைதானத்தில் வரும் காணும் பொங்கல் அன்று பாக்ஸிங் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பந்தயம் என்ன என்பதை போட்டி நடைபெறவுள்ள மூன்று நாட்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு நான் அறிவிப்பேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in