
இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை நேற்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2500 பேரை சந்தித்து எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பில் இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதில் இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 71% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 27% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமித்ஷா தமிழ்நாட்டு வந்து சென்ற பின்னர் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இக்கருத்து கணிப்பில் பாஜக மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக மீது உள்ள வெறுப்பால் பிரதமர் மோடிக்கு வெறும் 27% மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.