`ஓபிஎஸ்-சசிகலா-டிடிவி சந்திப்பு இதனால் தான் நடைபெறவில்லை’ - பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன ரகசியம்!

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்’ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி சந்திப்பு இதனால் தான் நடைபெறவில்லை’ - பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன ரகசியம்..!

''அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த என்னை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தான் ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு நடைபெறவில்லை’’ என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு என்பது சிறுப்பிள்ளைத்தனமானது. தேர்தலை முறையாக அவர்கள் அறிவிக்கவில்லை. பிரேக் இல்லாத வண்டியை போல அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் மக்கள் மன்றம் செல்வோம்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் தான் ஓபிஎஸ் - சசிகலா அரசியல் ரீதியான சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை. அதேபோல டி.டி.வி.தினகரன் அமமுக என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரும் இணைந்து பணியாற்றலாம். அதாவது சிபிஎம், சிபிஐ போன்று செயல்படலாம். தேர்தல் நேரத்தில் எல்லா விதமான சந்திப்புகளும் நிச்சயம் நடைபெறும். ஈபிஎஸ் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக கூறி வருகிறார். அவருடன் இருப்பவர்கள் தொண்டர்கள் அல்ல. குண்டர்கள் என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in