அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஈபிஎஸ்சை அனுமதிக்க கூடாது: டிஜிபியிடம் ஓபிஎஸ் தரப்பு மனு

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது

அதிமுக இடைகால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி 72 நாட்கள் முடிந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதால் அங்கு கலவரம் நடந்தது அதனை எடுத்து தலைமை அலுவலகத்திற்கு தமிழக காவல்துறை சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஈபிஎஸ் தரப்பில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையில் சாவியை ஈபிஎஸ் தரப்பில் காவல்துறையினர் ஒப்படைத்து இருந்தனர். ஆனாலும் ஈபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்லாமலே இருந்தார்.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்ததால் அவர் தலைமை அலுவலகத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் அந்த வழக்கிலும் தீர்ப்பு வெளியாகி அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து உட்கட்சி விவகாரம், பொதுக்குழு, தலைமை அலுவலக தகராறு, நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்குப் பிறகு இன்று முதல் முறையாக அதிமுக அலுவலகத்துக்கு ஈபிஎஸ் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் யாரையும் அனுமதிக்க கூடாது என மனு அளிக்கப் பட்டுள்ளது. அந்த மனுவில் அதிமுக தலைமை குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக பொதுக்குழு குறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுக தலைமைக் கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈபிஎஸ் தரப்புக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் இன்று அவர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in