தாம்பரம் மாநகராட்சியை வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

அமைச்சர் கே.என். நேரு
அமைச்சர் கே.என். நேருதாம்பரம் மாநகராட்சியை வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; தாம்பரம் மாநகராட்சி வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, வளர்ந்து வரும் மாநகராட்சியாகத் தாம்பரம் இருப்பதால், பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ’’ தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம், பம்மல், உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணி முழுமை பெற்றுள்ளது.

மீதமுள்ள செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கங்கரனை, பெருங்களத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஜூலை மாதம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து பாதாளச் சாக்கடை பணிகள் இந்தாண்டே தொடங்கப்படும்.

மேலும், நீர்வளத்துறையுடன் ஆலோசித்துப் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் ஏரிகளை மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரும் வகையில் மேம்படுத்தப்படும். தாம்பரம் மாநகராட்சி பகுதியை வண்டலூர் வரை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை வந்துள்ளது , அக்டோபர் மாதம்  2024-ம் ஆண்டுக்கு முன்பாக கிராமப் பகுதிகளை இணைத்து நகர்ப்புறப் பகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in