எல்லாம் தம்பிக்குத் தெரியும்; கோர்த்துவிட்ட செந்தில் பாலாஜி, மீண்டும் கரூரில் களமிறங்கிய அதிகாரிகள்!

செந்தில் பாலாஜி - அசோக்
செந்தில் பாலாஜி - அசோக்

கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் தங்களது காவலில் விசாரித்து வரும் நிலையில் கரூரில் அவரது குடும்பத்தினர் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதும் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

செந்தில் பாலாஜி குடும்பத்தினர் கட்டி வரும் வீடு
செந்தில் பாலாஜி குடும்பத்தினர் கட்டி வரும் வீடு

தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியின் போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுத் தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பாக 5 நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தனது தம்பிக்குத் தான் தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார். இங்கு விலை உயர்ந்த கிரானைட் மார்பில் கற்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கடந்த மே மாதம் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது பல ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.

அதிகாரிகள் சோதனை
அதிகாரிகள் சோதனை

இன்றைய தினம் மீண்டும் கரூரில் அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. புதிதாக கட்டி வரும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு இருப்பதாகவும், விலை உயர்ந்த கட்டுமான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in