எதிர்க்கட்சியின் கூட்டணியின் பெயர் 'இந்தியா'!

எதிர்க்கட்சியின் கூட்டணியின் பெயர் 'இந்தியா'!

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி (Indian National Democratic Inclusive Alliance) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை பலப்படுத்துவது, புதிய கூட்டணியை உருவாக்குவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்றுது. சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதோடு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி (Indian National Democratic Inclusive Alliance) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது ஏன்? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. மோடிக்கு எதிராக யார் என்ற கேள்வி எழுகிறது. மோடிக்கு எதிராக இந்தியாவே உள்ளது என்பதற்கு சான்றாக இந்தியா என பெயர் என எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in