`அதானி கேள்விக்கு வாய்திறக்கவில்லை; நட்பின் இலக்கணத்தை நாட்டுக்கு கற்றுக்கொடுத்தார் பிரதமர்'- வெங்கடேசன் எம்பி

வெங்கடேசன் எம்பி
வெங்கடேசன் எம்பி

நட்பின் இலக்கணத்தை நாட்டுக்கு கற்றுக்கொடுத்தார் பிரதமர் என வெங்கடேசன் எம்பி ட்வீட் செய்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டு கூட்டதொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அப்போது அவர், ``356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இந்தியாவில் மாநிலங்களின் ஆட்சியை 90 முறை காங்கிரஸ் கலைத்துள்ளது. இதில் 50 முறை இந்திரா காந்தி மாநிலங்களின் ஆட்சியை கலைத்துள்ளார்.

தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் தான். மகாராஷ்ட்ராவில் சரத்பவார், கேரளாவில் இடது சாரிகளின் ஆட்சிகளை கலைத்ததும் காங்கிரஸ் கட்சி தான். ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆட்சியை கலைக்க முயன்றதும் காங்கிரஸ் கட்சி தான். ஆட்சியை கலைத்த காங்கிரஸுடன் திமுக கூட்டணியா?'' என பேசினார்.

மக்களவை, மாநிலங்களவையில் ஹிண்டன்பர்க், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு பிரதமர் மோடி எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

இந்த்\நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் காந்தி, நேரு, எம்ஜிஆர், என்டிஆர், கருணாநிதி ஆகியோரை பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை. ஆனால், அவரைப்பற்றி பிரதமர் பேசினார். எல்லோரும் எழுப்பியது அதானியை பற்றிய கேள்வி. ஆனால், அதற்கு வாய் திறக்கவில்லை. நட்பின் இலக்கணத்தை நாட்டுக்கு கற்றுக்கொடுத்தார் பிரதமர்'' என ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in