`ஆளுநர் தமிழ்நாட்டை பழிக்க அல்ல; பாராட்டத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்'- அமைச்சர் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே கருத்து முரண்பாடும் இருந்துவருகிறது. இந்நிலையில் ஆளுநர் தமிழக அரசை பாராட்டத்தான் வேண்டும் என சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகமா? தமிழ்நாடா என ஆளுநர் பேசியதும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆளுநர், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் கையெழுத்துப் போடாதது தொடங்கி பல விவகாரங்களில் திமுக முரண்பட்டு நிற்கிறது.

இப்படியான அமைச்சர் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் முகநூலில் இன்று பதிவிட்டுள்ள பதிவில், “ஆளுநர் தமிழ்நாட்டை பழிக்க அல்ல. பாராட்டத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக பொருளாதார காரணிகளின் அடிப்படையில் இந்திய நாட்டின் 111 மாநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெண்களுக்கான முதன்மை நகரமாக சென்னை விளங்குவதாக  தெரியவந்துள்ளது. மேலும் முதன்மையான 10 இடங்களில் மதுரை மற்றும் கோவை இடம் பெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in