ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு

ஆளுநர் தேநீர் விருந்தை  புறக்கணித்தது தமிழக அரசு

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டான இன்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு காலம் தாழ்த்தாமல் அனுப்பிவைக்க வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், " இன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in