அரசால் ஒன்றும் செய்ய முடியாது... ஆளுநரின் கோரிக்கைக்கு கைவிரித்த அமைச்சர் எ.வ.வேலு!

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவு விற்கும் உணவகங்கள் இருப்பதைப் பார்த்தும் வருத்தமடைந்தேன் என ஆளுநர் குறிப்பிட்டுருந்த நிலையில் அது குறித்து அரசால் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, ’’சாப்பிடுவோரின் தனிப்பட்ட கருத்திற்கு நானோ அல்லது அரசோ தலையிட முடியாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமே அவர்களுக்கு ஏற்ப உணவு வகைகளை சாப்பிட்டு வருவது. ஆகையால் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் இந்த உணவைத்தான் விற்க வேண்டும் என்று என்னாலோ தமிழக அரசாலோ தெரிவிக்க முடியாது. உணவு சாப்பிடுபவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

அதை கட்டுப்படுத்த இயலாது. குறிப்பாக மாத மாதம் வரும் பௌர்ணமி தினத்தின் பொழுது கிரிவலப் பாதையில் உள்ள உணவகங்களில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை.

கிரிவலப் பாதையில் ஆளுநர்
கிரிவலப் பாதையில் ஆளுநர்

கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள் நன்றாக பயின்று பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தற்போது 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக மருத்துவ படிப்பிற்குள் நுழைய முடியாதவாறு மத்திய அரசு நீட் தேர்வு என்ற ஒரு விவகாரத்தை வைத்துள்ளது.

குறிப்பாக 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் மூன்று மாதம் தனியாரிடம் பயின்று நீட் தேர்வு எழுதினால் எவ்வாறு தேர்ச்சி அடைய முடியும் எனவும், ஆகையால் தமிழக அரசும் தமிழக முதல்வரும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள் எனவும், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in