தெலங்கானா தேர்தலில் களம் காண்பவர்கள் எத்தனை பேர்?: இன்று மாலை தெரியும்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

தெலங்கானாவில் 606  வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் எனத் தெரிகிறது.

பாஜக வேட்பாளர்களுக்காக அமித் ஷா பிரச்சாரம்
பாஜக வேட்பாளர்களுக்காக அமித் ஷா பிரச்சாரம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யாதது, உரிய ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என 606 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 2,898 வேட்பாளர்கள் சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் உள்ளனர். இன்று  வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்பதால் இன்று மாலைக்குப் பிறகு இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. 

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அதிகபட்சமாக 114 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவரது மற்றொரு தொகுதியான காமாரெட்டியில் 58 பேர் போட்டியில் உள்ளனர். மேட்ச்சலில் 67 பேரும், எல்பி நகரில் 50 பேரும் போட்டியிடுகின்றனர். கோடங்கலில் 15 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக நாராயணபேட்டையில் 7 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இங்கு பிஎஸ்ஆர் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in