முன்னாள் எம்எல்ஏவின் ரூ.72 கோடி சொத்துக்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

அமலாக்கத்துறை அலுவலகம்
அமலாக்கத்துறை அலுவலகம்

ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில்  உத்தர பிரதேச முன்னாள் எம்.எல்.ஏவின் ரூ.72 கோடி சொத்துக்களை அதிரடியாக  அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹரிசங்கர் திவாரியின் மகன் வினய் திவாரி. இவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சில்லுபார் தொகுதியில் எம்எல்ஏவாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் அவர் இணைந்தார். வினய்திவாரி மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் கங்கோத்ரி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.1129 கோடி கடன் வாங்கியதில் ரூ.754.24 கோடி வங்கிக்கு இழப்பீடு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. 

வினய் திவாரி
வினய் திவாரி

இதன் அடிப்படையில்  வினய் சங்கர் திவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. 

விசாரணையில் தவறு நடந்திருப்பது உறுதியானது. அதையடுத்து  ரூ.72 கோடி மதிப்புள்ள அவர்களின்  சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in