பானை சின்னத்தை ஒதுக்க முடியாது... திருமாவளவனுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!

விசிக பானை சின்னம்
விசிக பானை சின்னம்

மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. எனவே நாளை காலை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட விசிக முடிவு செய்துள்ளது.

பானை சின்னத்துடன் திருமாவளவன்
பானை சின்னத்துடன் திருமாவளவன்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டது. அதனால், இந்த முறையும் பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்ககோரி தேர்தல் ஆணையத்திடம் விசிக கோரிக்கை விடுத்தது.

திருமாவளவன், ரவிக்குமார்
திருமாவளவன், ரவிக்குமார்

மேலும், இதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று மாலைக்குள் விசிக கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பானை சின்னம் கோரி புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசிக 6 மாநிலங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் நிலையிலும் பானை சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைில், நாளை காலை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட விசிக முடிவு செய்துள்ளது.

விசிகவை போல திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கும் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. அதேபோல நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு திமுக கூட்டணி மற்றும் இதர கட்சிகளுக்கு கேட்கும் சின்னத்தை ஒதுக்காத தேர்தல் ஆணையம், அமமுக, தமாகாவுக்கு மட்டும் குக்கர், சைக்கிள் சின்னங்களை ஒதுக்கியது எப்படி என்றும், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படாமல், மத்திய அரசின் அசைவுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்றும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in