பம்பரம் சின்னம் கிடையாது... ‘தீப்பெட்டி’ சின்னத்தில் போட்டியிடும் மதிமுக!

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளதால் வேறு சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது.

பம்பரம் சின்னம்
பம்பரம் சின்னம்

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வைகோவின் மகன், துரை வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார். தாங்கள் இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக மதிமுக தெரிவித்திருந்த நிலையில் தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்காத நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்த உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

துரை வைகோ
துரை வைகோ

எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனுவை வைகோ தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படுமா என்று இன்று காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2:15 மணிக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

எனவே பம்பரம் சின்னத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த  மதிமுக தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in