பரபரப்பான சூழலில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ராஜஸ்தான், மிஜோரம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

தேர்தல்
தேர்தல்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள், 2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

ராஜீவ் குமார்
ராஜீவ் குமார்

இதற்கிடையே ஐந்து மாநிலங்களில் அதற்கு முன்னதாக, தேர்தலைச் சுமூகமாக நடத்துவது குறித்த தேர்தல் ஆணையம் நேற்று தனது பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தியது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் விதிகளை நடைமுறைப்படுத்துவது, செலவுகளைக் கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ராஜஸ்தான், மிஜோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆரம்பித்துவிட்டது. அதேபோல தெலங்கானாவிலும் விரைவில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று மதியம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in