`சமூக நீதியோடு, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்’- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

`சமூக நீதியோடு, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்’- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

“சமூக நீதி வரலாற்றில் மட்டுமல்ல சென்னை மாநகராட்சியின் தொழில் வளர்ச்சியிலும் திராவிட இயக்கம் பங்காற்றியுள்ளது. திராவிட மாடல் கோட்பாடு என்பது சமூக நீதியோடு, பொருளாதார வளர்ச்சியும் உள்ளடக்கி இருக்கிறது“ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய பணியளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “1920-ம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் என்னும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அதே ஆண்டில்தான் திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது. நீதிக்கட்சியைத் தொடங்கிய தியாகராஜர்தான் 1909-ம் ஆண்டு சென்னையில் வர்த்தக பிரமுகர்களை அழைத்துப் பேசி முதன் முதலாகத் தென்னிந்திய வர்த்தக கழகத்தை உருவாக்கியவர்.

12 ஆண்டுக்காலம் அதன் தலைமைப் பொறுப்பிலிருந்து, தொழில் வளர்ச்சிக்காக ‘சவுத் இந்தியன் டிரேட் ஜர்னல்’ என்னும் இதழையும் நடத்தி வந்தார். சமூக நீதி வரலாற்றில் மட்டுமல்ல சென்னை மாநகராட்சியின் தொழில் வளர்ச்சியிலும் திராவிட இயக்கம் பங்காற்றியுள்ளது. திராவிட மாடல் கோட்பாடு என்பது சமூக நீதியோடு, பொருளாதார வளர்ச்சியும் உள்ளடக்கி இருக்கிறது. இந்தியாவிற்கு பல்வேறு வகையில் தமிழ்நாடுதான் முன்மாதிரியான மாநிலமாகத் திகழ்கிறது. தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன் முதலில் உருவானது. பிரிட்டீஸ்காரர்கள் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையோடு, தொழிலாளர் உரிமையையும் கேட்டு தமிழகம் போராடியது” என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in