மறந்துடாதீங்க... திமுக ஆட்சி இதனால்தான் தூக்கி எறியப்பட்டது- வானதி சீனிவாசன் ஆவேசம்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

’’இதற்கு முன்பு திமுக ஆட்சி தூக்கி எறியப்பட்டதற்கு திரைத்துறையில் இவர்கள் செலுத்திய ஆதிக்கம்தான் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது’’ என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் 'விருட்சம்' திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மரக்கன்று நட்டு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வமும் பொறுப்பும் உருவாகும்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் வண்டவாளங்கள் ட்ரங்க் பெட்டியில் ஏற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியது பற்றி பதிலளித்த வானதி சீனிவாசன், "திமுக ஃபைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா என்பதை பார்க்கத்தான் போகிறோம்’’ என்றார்.

தொடர்ந்து ’லியோ’ திரைப்படம் குறித்த கேள்வி பதிலளித்த அவர், ‘’திரைத்துறை திமுக ஆட்சியில் ஆட்சியாளர்களுக்குத்தான் செழிப்பாக உள்ளது. எந்தப் படத்தை பார்த்தாலும் ரெட் ஜெயண்ட் தான். அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன்னுதாரணம். ஒட்டுமொத்த திரைத்துறையையும் கையில் வைத்துள்ளனர். இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் இப்படி இருந்ததால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதே தவறைத்தான் மீண்டும் செய்து வருகிறார்கள்" எனக் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in