`கால்பந்து வீராங்கனை மரணத்துக்கு திமுக அரசே காரணம்'- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

`கால்பந்து வீராங்கனை மரணத்துக்கு திமுக அரசே காரணம்'- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

``அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு திமுக அரசே காரணம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதுடைய பிரியா என்ற கால்பந்து வீராங்கனை சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்ததோடு, பல பதக்கங்களையும் குவித்துள்ளார். இதனிடையே, பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இததையடுத்து, அவருக்கு பெரியார் நகரில் உள்ள காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தவறான சிகிச்சையால் அவருக்கு காலில் கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிரியா உயிரிழந்தார்.

இதனிடையே, மாணவி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிகாலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in