இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம்! அனல் பறக்கும் அரசியல்!

இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம்! அனல் பறக்கும் அரசியல்!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் இளம்  தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக  நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் நடப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு பாஜக தரப்பில் எவ்வித பதிலும் தரப்படாத நிலையில் இந்த விவகாரத்தை முன்வைத்து  நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. அத்துடன்  மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன.

அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பியாக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை  தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in