ஜெயலலிதா இறந்த தேதி, சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியம்: சட்டப்பேரவையில் தாக்கலான அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதா இறந்த தேதி, சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியம்: சட்டப்பேரவையில் தாக்கலான அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாகவும், அமெரிக்காவில் வந்த டாக்டர் சலீன் சர்மா ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சையை பரிந்துரைத்துள்ளார் என்றும் ஆனால் அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை அறுவை சிகிச்சை நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் 2012-ம் ஆண்டு முதல் ஜெயலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சுமுக உறவு இல்லை எனவும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு தாமதத்துடன் அழைத்து வரப்பட்டு உள்ளதாகவும் அதற்கு முன்பு நடந்த நிகழ்வை சசிகலா ரகசியமாக காத்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அப்போலோவில் சசிகலா உறவினர்களால் 10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்றும் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தும் கடைசி வரை அது நடக்கவில்லை என்றும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதனால் இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சசிகலாவின் உறவினர்களால் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட டாக்டர் சமீன் சர்மாவை ஏற்பாடு செய்தவர் யார் என்ற விவரம் கடைசிவரை கூறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன என்றும் 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது என்றும் சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4-ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் என்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலா, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in